search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    இந்துக்களை தாக்கிய காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல்

    இந்துக்களை தாக்கிய காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    கைகளில் விலங்குகளுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம், புல்லட் மற்றும் கிரீனேடுகள் அடங்கிய மற்றொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நிற்கும் நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட நபர் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அசாம் மாநிலத்தில் ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் ஒன்று வங்கதேசம் மற்றொன்று காஷ்மீரில் எடுக்கப்பட்டது ஆகும். 

    இதே புகைப்படங்களை மே 2018 வாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பல்வேறு செய்தி தொகுப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புகைப்படத்தில் இருப்பது வங்கதேசத்தை சேர்ந்த மொபாரக் ஹூசைன் என்பதும் இவர் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×