search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளா பாஜக எம்பி தாயாரின் இறுதி சடங்கை இப்படி நடத்தினாரா?

    கேரளா மாநிலத்தை சேரந்த பாஜக எம்பி தனது தாயாரின் இறுதி சடங்கை இப்படி நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் கொரோனாவைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 28 லட்சத்தை கடந்துவிட்டது. மேலும் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பாஜக எம்பியான அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் தாயார் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்றும், இவர் இந்த தகவலை மறைத்து தாயாரின் உடலை டெல்லியில் இருந்து கேரளாவுக்கு அனுப்பி இறுதி சடங்கை செய்தார் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இத்துடன் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக எம்பி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பாஜக எம்பியின் தாயார் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் எம்பியின் தாயார் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்கும் முன் 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டு பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றே தெரிவிக்கப்பட்டது.

    பாஜக எம்பி அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது தாயாருக்கு மே 28 ஆம் தேதி கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொரோனாவைரஸ் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்தார் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

    இதன் பின் ஜூன் 5 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட கொரோனாவைரஸ் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்றே தெரியவந்தது என அவர் மேலும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    அந்த வகையில் கேரளா பாஜக எம்பி தாயார் கொரோனாவைரஸ் பாதிப்புக்கு ஆளான போதிலும், அவர் குணமடைந்து சில நாட்கள் கழித்து அவர் உயிரிழந்தார் என தெரிகிறது. அந்த வகையில் பாஜக எம்பியின் தாயார் கொரோனாவைரஸ் தொற்றால் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×