search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனாவைரஸ்"

    • 1.1 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
    • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்டது.

    இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி நாடு முழுக்க கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 840 ஆக இருந்த நிலையில், நேற்று 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் 100-க்கும் கீழ் குறைந்தது. எனினும், கடந்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. புதிதாக உருவாகி இருக்கும் கொரோனா ஜே.என். 1 வகை தொற்று மற்றும் குளிர்காலம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800-இல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்தது. எனினும், புதிதாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்துள்ளது. புதிய வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பத்து பேர்களில் 1.1 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    புது வகை தொற்று குறித்து சுகாதார துறை வட்டாரங்கள் கூறும் போது, "17 மாநிலங்களில் ஜே.என். 1 வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்ட போதிலும், இதுகுறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை," என தெரிவிக்கப்பட்டது. 

    • கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளது.
    • 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனை.

    இந்தியாவின் இன்சாகோக் (இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்) நாட்டில் 1104 பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எனினும், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இந்தியாவில் 4 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் 3 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கர்நாடகாவில் 214 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 189 பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும் கேரளா மாநிலத்தில் 154 பேருக்கும் கொரோனா ஜே.என். 1 தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ஜே.என். 1 தொற்றாளர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக கர்நாடகா உருவாகியுள்ளது.

    • கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலை.
    • இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

    டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    "நேற்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து விதமான பரிசோதனைக்கான வசதியும் உள்ளது. நுண்ணுயிரியல் பிரிவில் என் கண்காணிப்பின் கீழ் தனியாக 12 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது."

     


    "கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்துவோம். தங்களது வார்டுகளுக்கு கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை, அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளைுக்கும் உத்தரவிட்டுள்ளோம்."

    "மருந்துகள், பி.பி.இ. கிட் மற்றும் இதர உபகரணங்கள் என கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேவையான அளவுக்கு தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும், கொரோனா நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது," என்று எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சஞ்சீவ் லால்வானி தெரிவித்துள்ளார்.

    • ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
    • மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    ×