search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona JN.1"

    • ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
    • மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    • ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.
    • உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது.

    இந்தியாவில் புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு பல்வேறு உருமாற்றங்களால் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனா ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.

    புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து, உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பின் தலைவர், மருத்துவர் என்.கே. அரோரா உண்மை விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த வாரம் வரையிலும், கடந்த எட்டு வாரங்கள் வரையிலும் 22 பேருக்கு புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை. மற்ற வகை கொரோனா பாதிப்புகளை போன்ற அறிகுறிகளை JN1 வகையும் வெளிப்படுத்துகிறது."

    "கொரோனா JN1 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதாக எந்த தகவலும் இல்லை. தற்போதைய சூழலில் இந்த வகை கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் அடைய வேண்டியதில்லை, மாறாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று தெரிவித்தார். 

    • கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு.

    இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     


    "புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.

    கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ×