search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா, உத்தவ் தாக்கரே,
    X
    அமித்ஷா, உத்தவ் தாக்கரே,

    அமித்ஷா விரைவில் குணம்பெற உத்தவ் தாக்கரே வாழ்த்து

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணம்பெற வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் அமித்ஷா விரைவில் குணம்பெற மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், அமித்பாய், நீங்கள் மிக விரைவில் குணம்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். எப்போதும் போல நீங்கள் முழு ஆற்றலுடன் பணியாற்றி கொரோனா பிரச்சினையில் எங்களை வழிநடத்த வேண்டும், என கூறியுள்ளார்.
    Next Story
    ×