search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை
    X
    கனமழை

    கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

    கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததை காண முடிந்தது.  கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளித்தது. இதனால், மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ’ஆரஞ்சு அலர்ட்’எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    மிக மிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலர்ட் எச்சரிக்கை குறிக்கிறது.  அதேபோல், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை  என்றால்,  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியாக விடப்படும் அறிவுறுத்தல் ஆகும்.   ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் கேரள கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×