search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுக்கி"

    • இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
    • பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    உலகில் வாழும் பல்வேறு உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

    5.5 முதல் 8 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய வகை பச்சோந்தி, அகஸ்தியாகம எட்ஜ் என கூறப்படுகிறது. இதற்கு வடக்கு கங்காரு பச்சோந்தி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் 12 ஆயிரம் ஊர்வனவற்றில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வடக்கு கங்காரு பச்சோந்தி, தொண்டையில் நீல செதில்களுக்கு மத்தியில் மத்திய சிவப்பு மற்றும் தங்க நிறத்தால் மற்ற பச்சோந்திகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறது.

    மரத்தில் ஏறுவதை தவிர்த்து, உலர்ந்த இலைகளுக்கு மத்தியில் வடக்கு கங்காரு பச்சோந்தி தரையில் வாழ்வதாகவும், ஆபத்தை உணரும்போது, 2 கால்களில் நிற்கும் இலைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்ளும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×