என் மலர்
இந்தியா

கேரளாவில் திடீர் நிலச்சரிவு: கணவர் உயிரிழப்பு - மனைவி மருத்துவமனையில் அனுமதி
- இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன
மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story






