search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chameleon"

    • இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
    • பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    உலகில் வாழும் பல்வேறு உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

    5.5 முதல் 8 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய வகை பச்சோந்தி, அகஸ்தியாகம எட்ஜ் என கூறப்படுகிறது. இதற்கு வடக்கு கங்காரு பச்சோந்தி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் 12 ஆயிரம் ஊர்வனவற்றில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வடக்கு கங்காரு பச்சோந்தி, தொண்டையில் நீல செதில்களுக்கு மத்தியில் மத்திய சிவப்பு மற்றும் தங்க நிறத்தால் மற்ற பச்சோந்திகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறது.

    மரத்தில் ஏறுவதை தவிர்த்து, உலர்ந்த இலைகளுக்கு மத்தியில் வடக்கு கங்காரு பச்சோந்தி தரையில் வாழ்வதாகவும், ஆபத்தை உணரும்போது, 2 கால்களில் நிற்கும் இலைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்ளும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பச்சோந்தி சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.
    • மரம் செடி கொடிகளின் நிறத்தைப்போலவே தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.

    உடுமலை:

    உடுமலைரெயில் நிலையம் அருகே அரிய வகை பச்சோந்தி சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர். பொதுவாக குளிர் ரத்த பிராணி வகையைச் சேர்ந்த பச்சோந்திகள் உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க நிறம் மாற்றும் தந்திரத்தை கடைப்பிடிக்கின்றன.

    அடுத்து பெண் பச்சோந்தியை கவருவதற்கு எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள பக்கத்தில் இருக்கும் மரம் செடி கொடிகளின் நிறத்தைப் போலவே தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. பச்சோந்தியின் குணாதிசையம் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. வன பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த வகை பச்சோந்தியை நகர பகுதியில் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #SenthilBalaji

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 91-வது வார்டான ஜெய்ஹிந்துபுரத்தில் ஆழ்துளை கிணறு, புதிய சாலை உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கவுன்சிலராக இருக்கும் போது அ.தி.மு.க.விற்கு வந்தார். அம்மா இல்லாத நேரத்தில் அ.தி.மு.க.வை காக்க வேண்டிய அவர் இந்த நேரத்தில் நிறம் மாறி தி.மு.க.வுக்கு சென்று விட்டார்.

    செந்தில்பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி. அவர் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்திற்கு வந்தார், போனார் என்ற அடிப்படையில் தான் பார்க்கிறோம். அவர் ஒன்றும் தியாகி கிடையாது. அவரை பொறுத்தவரை ஒரு சுயநலவாதி.

    அம்மா தனது ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவரை அமர்த்தி அழகுபார்த்தவர். தி.மு.க. ஊழல் இல்லாத கட்சி என்று மு.க.ஸ்டாலின் பறை சாற்றி வருகிறார். ஆனால் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்பவர் செந்தில்பாலாஜி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. எப்படி அவரை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்?

    ஒரு ஊழல் கட்சி, ஊழல்வாதியை ஏற்றுக்கொள்வது சர்வ சாதாரணம் தான்.

    இது போன்று தான் செல்வகணபதி, ரகுபதி போன்றவர்கள் எங்களிடம் இருக்கும்போது நல்லவர்களாக இருந்தார்கள். தி.மு.க.வில் சேர்ந்தபின்னர் ஊழல்வாதிகளாக மாறி விட்டனர்.

    நாங்கள் அம்மா வழியில் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். தினகரன் அணியை பொருட்படுத்த மாட்டோம். அம்மாவின் கொள்கையை ஏற்றுள்ள எந்த தொண்டனும் தி.மு.க.வுக்கு போக மாட்டார்கள். தி.மு.க.வில் சேருவது என்பது தற்கொலைக்கு சமமானது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணப்பணியில் அமைச்சர்களை ஈடுபடுத்தி மக்களுக்கு தேவையானதை செய்தார். மத்திய அரசை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மற்றும் மத்தியக்குழுவின் மூலம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி நிவாரண நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    பிரதமர் சேதமடைந்த பகுதியை பார்ப்பது என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் சேதத்திற்குரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, சோலைராஜா, பைக்காரா கருப்புசாமி, பிரிட்டோ, கலைச்செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×