search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை: மந்திரி சுரேஷ்குமார்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. ஆனால் குழந்தைகளை தொடர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுத்த என்னென்ன வழிகள் உள்ளதோ அதுகுறித்து ஆராய்ந்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. ஆனால் குழந்தைகளை தொடர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுத்த என்னென்ன வழிகள் உள்ளதோ அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏற்கனவே ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூலம் பயிற்றுவித்தல் பணி நடக்கிறது. யூ-டியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலமும் குழந்தைகளுக்கு கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் நூலகங்களுக்கு குழந்தைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து புத்தகங்களை படிக்கலாம். இந்த நெருக்கடியான தருணத்தில் பாடத்திட்டம் முக்கியம் அல்ல. கற்றல் பணி நடைபெற வேண்டும். அது தான் முக்கியம். பாடத்திட்டம் சாராத விஷயமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் படிக்க வேண்டும்.

    இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
    Next Story
    ×