search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் - பிரதமர் நடவடிக்கை எடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

    ரேபிட் டெஸ்ட் கருவி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பேரிடருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கும்போது, சிலர் அதை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். கொரோனா பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளை மத்திய அரசுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி


    இத்தகைய ஊழல் மனோபாவத்தை கண்டு ஒவ்வொருவரும் வெட்கப்படுகிறார்கள். அவர்களை நாடு மன்னிக்காது. அவர்கள் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா


    கொரோனா ‘ரேபிட் டெஸ்ட்’ கருவியை ரூ.225-க்கு இறக்குமதி செய்து, அதை மத்திய அரசுக்கு 600 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதன்மூலம் 166 சதவீத லாபம் ஈட்டி உள்ளனர்.இதில் ஊழல் நடந்துள்ளது. வெட்கக்கேடான, மனிதத்தன்மையற்ற செயல். இதற்கு காரணமானவர்களை பிரதமர் மோடி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×