என் மலர்

  செய்திகள்

  பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் - கோப்புப்படம்
  X
  பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் - கோப்புப்படம்

  டெல்லியில் மேலும் 15 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 15 வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
  புதுடெல்லி:

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர். இந்தியாவில் நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி வரும் வீரர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

  மருத்துவ உதவியாளரான அவர் விடுமுறையில் இருந்து முகாமுக்கு திரும்பியபோது நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த முகாமில் உள்ள அனைத்து வீரர்களும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 15 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
  Next Story
  ×