search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனா அச்சுறுத்தலை மத்திய அரசு குறைவாக மதிப்பிட்டுள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைவாக மதிப்பிட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கொரோனா வைரஸ் பிரச்சினை மிக தீவிரமாக உள்ளது. ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    அனைவரும், பொருளாதார நிலை குறித்து பார்த்து வருகின்றனர். இந்தியாவின் பலமே அதன் பொருளாதாரம் தான். ஆனால், மோடியின் கொள்கைகள் அதனை சீரழித்து விட்டது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும். 

    பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என வழி தெரியாமல் நிர்மலா சீதாராமன் உள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்து இளைஞர்களிடம் கூறியுள்ளேன். உண்மையில், பா.ஜ.க,வில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மரியாதை கிடைக்காது. அவர் மனதில் உள்ளதற்கும், வாயில் இருந்த வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×