search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்பை வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்பை வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    விருந்தில் பங்கேற்க ராஷ்டிரபதி பவன் வந்த அதிபர் டிரம்பை வரவேற்ற ஜனாதிபதி

    தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ள விருந்தில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உற்சாகமாக வரவேற்றார்.
    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.

    முதல் நாளான நேற்று சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் சென்றார். 

    அதன்பின், அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து, டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.

    இரண்டாம் நாளான இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ள விருந்தில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உற்சாகமாக வரவேற்றார். 

    ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், டிரம்ப், மெலானியாவுடன் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    Next Story
    ×