search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி மாளிகை"

    • ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது.
    • பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

    புதுடெல்லி :

    ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன.2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

    • 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார்.

    டெல்லி:

    ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'முகலாய' தோட்டத்தை 'அம்ரித் உதயன்' என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஆண்டு நாடு சுந்திரமடைந்து 75வது ஆண்டை கொண்டாட உள்ள நிலையில் 'அசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுதந்திர தினம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி அம்ரித் உதயன் என அழைக்கப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும்.

    அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். அதுபோல், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம்.

    மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றவர்கள் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஆண் மற்றும் அவரது தோழி இருவரும் குடிபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. #RashtrapatiBhavan
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

    இதனை அடுத்து, அறையின் கதவை உடைத்து பார்த்த பின்னர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு நான்காம் நிலை ஊழியராக இருக்கும் த்ரிலோகி சாந்த் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

    இதனால், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    ×