என் மலர்
நீங்கள் தேடியது "பூனம் குப்தா"
- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.
- இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவந்தது.
இந்த நிலையில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) தலைமை இயக்குநராக பணியாற்றும் பூனம் குப்தாவை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 4-வது ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக 3 ஆண்டு காலத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூனம் குப்தா பதவியேற்கும் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலும் உறுப்பினராவார்.
- வருகிற 12-ந்தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.
- முதல் முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன.
இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அப்போது முதல் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர் பூனம் குப்தா நாடு முழுவதும் பிரபலமாக உள்ளார். மத்திய பிரதேசத்தின் சிவபுரியை சேர்ந்த அவருக்கும் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டராக பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பூனம் குப்தாவின் திருமணம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் திருமணத்தை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி வருகிற 12-ந்தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. முதல்முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பூனம் குப்தாவின் நெருங்கிய உறவினர் சோனு என்பவர் கூறியதாவது:-
மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியின் அலுவலக மேலாளராக ரகுவீர் குப்தா பணியாற்றுகிறார். இவரது மூத்த மகள் பூனம் குப்தா.
கடந்த 2018-ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. சி.ஏ.பி.எப். தேர்வை எழுதிய பூனம் சி.ஆர்.பி.எப். படையில் துணை கமாண்டராக பணியில் சேர்ந்தார்.
தற்போது அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரது நன்னடத்தையால் கவரப்பட்ட ஜனாதிபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பூனமின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமண விழா ஜனாதிபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.






