என் மலர்
செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #RamnathKovind #PMModi
புதுடெல்லி:
பிரதமர் மோடி சமீபத்தில் 2 நாள் பயணமாக சீனா சென்றார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். மேலும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்பின், பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு சென்றார். அப்போது, தனது சீன பயணம் குறித்தும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது குறித்தும் விளக்கி கூறினார் என தெரிவித்துள்ளது. #RamnathKovind #PMModi
Next Story






