என் மலர்
நீங்கள் தேடியது "Rashtrapati Bhawan"
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
இந்நிலையில், குடியரசு தினவிழா 26-ம் தேதி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் வீரர்கள் பாசறை திரும்பும் விழா போன்றவை காரணமாக ஜனாதிபதி மாளிகையை பொது மக்கள் பார்வையிட வரும் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், 29-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில், செசல்ஸ் அதிபர் டேனி டெல்லியில் இன்று மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். #SeychellesPresident







