search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர்
    X
    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் ஷேக் அப்துல்லா பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை ரத்து

    காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா பிறந்த நாளுக்கு அளித்து வந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா பிறந்த நாளான டிசம்பர் மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறையாக இருந்தது. அதுபோல் ஜூலை மாதம் 13-ந்தேதி தியாகிகள் தினம் என்று அரசு விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த 2 விடுமுறைகளும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன.

    அதற்கு பதிலாக அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீர் இணைப்பு தினம் என்று அறிவித்து அதற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான விடுமுறை தின அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளைத்தான் ‘காஷ்மீர் இணைப்பு தினமாக’அறிவித்து இருக்கிறார்கள்.

    அதுபோல் கடந்த 1931-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை நினைவுக் கூறும் விதமாக தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×