search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கை பதிவு செய்த எம்எஸ் தோனி
    X
    வாக்கை பதிவு செய்த எம்எஸ் தோனி

    மூன்றாம் கட்ட தேர்தல் - ஜார்க்கண்டில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட சட்டசபை தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    இதற்கிடையே, மூன்றாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 
     
    பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். ஆளுநர் திரவுபதி முர்மு ராஞ்சியிலும், முன்னாள் மத்திய மந்திரி சுபோத்காந்த் சகாய் கிஜ்ரியிலும் ஓட்டு போட்டனர். முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்தார். 

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட சட்டசபை தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×