search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி
    X
    ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி

    சசி தரூர் பதிவிட்ட ஜவகர்லால் நேரு புகைப்படம் - உண்மை பின்னணி

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரது புகைப்படத்தின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்வையொட்டி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் பெரும் கூட்டத்தின் மத்தியில் கையசைக்கும் பழைய புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    சசி தரூர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் 1954 ஆம் ஆண்டு இருவரும் அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்திருக்கிறார். சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படத்திற்கு, "எவ்வித விளம்பரமும் இன்றி அமெரிக்க குடிமக்கள் கொடுத்த ஆரவார வரவேற்பை பாருங்கள்", என தலைப்பிட்டிருக்கிறார்.

    சசி தரூர் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    செப்டம்பர் 22 ஆம் தேதி ஹௌடி மோடி எனும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி. அரங்கில் உரையாற்றினார். இதனையொட்டியே சசி தரூர் பழைய புகைப்படத்தை பதிவிட்டார் என கூறப்படுகிறது.

    சசி தரூர் பதிவிட்ட புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 1955 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் இது ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ரஷ்யாவுக்கு சுற்றுப் பணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்டது என உறுதியாகியுள்ளது. இதுபற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.

    சசி தரூர் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    சசி தரூர் பதிவு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. பின் அவர் பதிவிட்ட தகவல் தவறு என அறிந்து கொண்ட சசி தரூர், "நான் கூற விரும்பும் தகவலில் இப்போதும் மாற்றுக்கருத்து இல்லை. முன்னாள் பிரதமர்களும் வெளிநாட்டு பயணங்களில் பிரபலத்தன்மையை கொண்டாடி இருக்கின்றனர்," என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளாமல் அவற்றை பகிர வேண்டாம். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இணையத்தில் வலம் வரும் தகவல் பொய் என்பதை அறியாமலேயே பலர் அவற்றை பகிர்ந்து வருகின்றனர். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. 
    Next Story
    ×