search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    பெண்களை கொடூரமாக தாக்கும் அதிகாரிகள் - வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி

    ராணுவ வீரர்கள் பெண்களை கொடூரமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



    இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் பெண்களை கொடுமைப்படுத்துவதாக கூறும் ஃபேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது. இதில் ராணுவ உடையில் உள்ள அதிகாரிகள் சிலர் பொது வெளியில் பெண்களை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோ பின்னணியில் சோக இசை சேர்க்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 8 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவினை இதுவரை சுமார் பல லட்சம் பார்வையாளர்களை பெற்றிருப்பதோடு, 38,000-க்கும் அதிகம் பேர் பகிர்ந்துள்ளனர். வீடியோ உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    வீடியோவை உற்று நோக்கும் போது அதில் இருந்த அதிகாரிகள் அணிந்திருந்த உடையில் பாகிஸ்தான் நாட்டு கொடி இடம்பெற்றிருக்கிறது. இதுவே இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதை உறுதி செய்துவிட்டது. மேலும் வீடியோவில் இருப்பவர்கள் பாகிஸ்தான் நாட்டு காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோ பற்றி இணையத்தில் தேடியபோது யூடியூப் வீடியோ ஒன்று காணக்கிடைத்தது. அதில் இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் முல்தான் பகுதியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

    வைரல் வீடியோவிலும் பலர் இது போலி என கமென்ட் செய்திருக்கன்றனர். எனினும், இணையத்தில் இது தொடர்பான செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
    Next Story
    ×