search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகாமை தொடங்கிய பிரதமர் மோடி
    X
    முகாமை தொடங்கிய பிரதமர் மோடி

    பாஜக எம்பிக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் - பிரதமர் மோடி, தேசிய தலைவர் பங்கேற்பு

    பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    பாஜக சார்பில் பாராளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ள உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் இன்று தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

    சமீபகாலமாக பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பாலியல் புகார்களில் சிக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில், இதுபோன்ற பயிற்சி முகாமுக்கு பா.ஜ.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×