search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த (2019-20) ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தொகையில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 682.42 கோடி ரூபாய் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 248.80 கோடி ரூபாய் முதலீடு மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கும் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நிர்மலா சீதாராமன்


    மேலும் பாதுகாப்பு படையினர் ஓய்வூதியத்துக்காக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 79.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் சேர்த்து பாதுகாப்பு துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 4 லட்சத்து 31 ஆயிரத்து 10.79 கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான மொத்த செலவினத்தில் இந்த தொகை 15.47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×