search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் - பா.ஜ.க. தலைவர்கள் ஒருசேர முகாமிட்டு வாக்கு சேகரிப்பு
    X

    கர்நாடக தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் - பா.ஜ.க. தலைவர்கள் ஒருசேர முகாமிட்டு வாக்கு சேகரிப்பு

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Karnatakaelections2018 #BJPtopleaders
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



    வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரின் பிரசாரங்களும் சூடுபிடித்து, களைகட்டியுள்ளது.

    சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. 

    இந்நிலையில், பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.

    இதையடுத்து, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று தும்கூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசி வருகிறார்.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மைசூரு ராஜேந்திரா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். 



    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலபுராகி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    #Karnatakaelections2018 #BJPtopleaders 
    Next Story
    ×