search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு
    X

    சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு

    ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை வருகிற 20-ந் தேதி வரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது.

    இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×