search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு ரூ.25 கோடி போதை பொருள் கடத்திய பிலிப்பைன்ஸ் இளம்பெண் கைது
    X

    கேரளாவுக்கு ரூ.25 கோடி போதை பொருள் கடத்திய பிலிப்பைன்ஸ் இளம்பெண் கைது

    கேரளாவுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இளம்பெண்னை மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மஸ்கட் வழியாக ஓமன் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் இருந்து இறங்கி பயணிகளுடன் ஒரு இளம்பெண் சூட்கேசுடன் நடந்து வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இளம்பெண் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தனர். சூட்கேசில் ரகசிய அறை அமைந்திருந்தது. அதில் சோதனை செய்தபோது 4ž கிலோ கொக்கைன் என்னும் போதை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



    விசாரணையில் போதை பொருள் கடத்தி வந்த இளம்பெண் பிலிப்பைன்ஸ் நாடு சவா போலோ பகுதியை சேர்ந்த டிகாய் ஜோநாடி சைன் (வயது 36) என்பதும் கொச்சியில் உள்ள ஒரு நபருக்கு 1 கிலோவுக்கு ரூ.3 லட்சம் கமி‌ஷன் என்ற அடிப்படையில் கொக்கைனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இளம்பெண் கடத்தி வந்த 4žகிலோ கொக்கைன் போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.25 கோடி ஆகும். கேரளாவில் சமீபத்தில் சிக்கிய மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் இதுவாகும் என்று போதை தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    #tamilnews
    Next Story
    ×