search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பிரசாரம்
    X

    குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பிரசாரம்

    குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அங்கு இன்றும், நாளையும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அங்கு இன்றும், நாளையும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    போர்பந்தரில் மீனவ சமுதாயத்தினரை அவர் இன்று சந்தித்து பேசுகிறார். பிறகு, ஆமதாபாத் அருகே தலித் சமுதாயத்தினரை சந்திக்கிறார். மருத்துவ பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களுடனும் உரையாடுகிறார். மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் வாகன பேரணியில் பங்கேற்கும் ராகுல் காந்தி, பட்டேல் சமூகத்தினர் மிகுதியாக வாழும் நிகமல் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    நாளை அவர் காந்தி நகர், ஆரவல்லி மற்றும் பழங்குடியினர் மிகுந்த மாவட்டங்களில் தெருமுனை பிரசாரங்களில் ஈடுபடுகிறார்.
    Next Story
    ×