என் மலர்

  செய்திகள்

  ஊகத்திற்கு பரிசளிக்க முடியாது: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி
  X

  ஊகத்திற்கு பரிசளிக்க முடியாது: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடால்ப் ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியதற்கு, பதிலடியாக ஊகத்திற்கு எல்லாம் பரிசளிக்க முடியாது என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியை, சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி மக்களைப பற்றி கவலைப்படாமல் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார் என அவர் பேசியிருந்தார்.

  இந்நிலையில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ராகுலின் பேச்சுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் பதிவிடுகையில், “சர்வாதிகாரி ஹிட்லரால் கவர்ந்திழுக்கப்பட்டவர் யார் என்பதை நீங்கள் தான் உணர வேண்டும். யார் எமெர்ஜென்சியை அமல்படுத்தியது? ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது யார்? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களின் ஊகத்திற்கு எல்லாம் பரிசளிக்க முடியாது’’ என குறிப்பிட்டிருந்தார்.
  Next Story
  ×