என் மலர்

  நீங்கள் தேடியது "reply"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு, சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #HRaja
  சென்னை:

  தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டார். இதற்கென இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய பொதுக்குழுவில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக-வை வழிநடத்த இன்று புதிதாக பிறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.  இந்த உரைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவித்தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும், களம் காண்போம் எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மோடியின் காவி தொண்டர்கள் என எச்.ராஜா குறிப்பிட்டிருப்பது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. #DMK #MKStalin #HRaja
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடி இன்று தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை வெளியிட்டு விடுத்திருந்த பிட்னஸ் சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உடனடியாக பதில் அளித்துள்ளார். #FitnessChallenge #PMModi #Kumaraswamy
  பெங்களூரு:

  கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் பிரதமர் மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.  அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். இந்த பதிவைப் பார்த்த குமாரசாமி, உடனடியாக பதிலளித்துள்ளார்.  “என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆதரவும் தெரிவிக்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறும்.

  ஆனால், உன் உடல் பிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என குமாரசாமி சூடாக பதிலளித்துள்ளார். #FitnessChallenge #HumFitTohIndiaFit #PMModi #ViratKohli #Kumaraswamy

  ×