search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fitness Challenge"

    பிரதமர் மோடியின் பிட்னஸ் சவாலை ஏற்று கேரள ஐபிஎஸ் அதிகாரி, தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். #FitnessChallenge #HumFitTohIndiaFit
    திருவனந்தபுரம் :

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி உள்பட சிலரை டேக் செய்திருந்தார்.

    விராட் கோலியின் இந்த சவாலை ஏற்று காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி வெளியிட்டார். அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட துணிச்சலான ஐ.பி.எஸ் அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்திருந்தார்.



    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிட்னஸ் சவாலை ஏற்று கேரள மாநிலம் திரிசூர் மாவட்ட போலீஸ் ஆணையர் ஜி.எச்.யதிஷ் சந்திரா அவரது பேஸ்புக் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியின் பிட்னஸ் சவாலை ஏற்றுக்கொள்வதை நான் பெருமையாக நினைப்பதாகவும் பேஸ்புக் பதிவில் யதிஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார். #FitnessChallenge  #HumFitTohIndiaFit

     அந்த வீடியோவை காண https://www.youtube.com/watch?v=CSHb1Oo1PCw
    பிரதமர் மோடி இன்று தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை வெளியிட்டு விடுத்திருந்த பிட்னஸ் சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உடனடியாக பதில் அளித்துள்ளார். #FitnessChallenge #PMModi #Kumaraswamy
    பெங்களூரு:

    கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் பிரதமர் மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.



    அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். இந்த பதிவைப் பார்த்த குமாரசாமி, உடனடியாக பதிலளித்துள்ளார்.



    “என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆதரவும் தெரிவிக்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறும்.

    ஆனால், உன் உடல் பிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என குமாரசாமி சூடாக பதிலளித்துள்ளார். #FitnessChallenge #HumFitTohIndiaFit #PMModi #ViratKohli #Kumaraswamy

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் வெளியிட்டுள்ள உடற்பயிற்சிக்கான சவாலை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஏற்று கொண்டுள்ளார். #AmitabhBachchan #HumFitTohIndiaFit #FitnessChallenge
    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

    இவரது இந்த சவாலை விராட் கோலி, அனுஷ்கா சர்மா, சாய்னா நேவால் ஆகியோர் ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட துவங்கியுள்ளனர். மேலும், அவர்களின் வீடியோக்களை வெளியிட்டு அதனை டேக் செய்வதன் மூலம் டேக் செய்யப்படுபவர்களுக்கும் சவால் விடுக்கப்படுகிறது.

    இந்நிலையில், விளையாட்டுத்துறை மந்திரியின் இந்த புதிய சவாலை இந்தி திரை உலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.



    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும், சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து சூரியனை காண வேண்டும் போன்ற வாசகங்களை பதிவிட்டு சவாலை சந்திக்க உள்ளார் அமிதாப் பச்சன். #AmitabhBachchan #HumFitTohIndiaFit #FitnessChallenge
    கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சவாலை ஏற்று, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார். 
     
    இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

    அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார்.



    இந்நிலையில், கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியுள்ளார்.  #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli
    ×