என் மலர்

  செய்திகள்

  ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
  X

  ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையின் முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  புதுடெல்லி:

  நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பொது நிறுவனங்கள் வாரியத் தலைவராக இருந்த சஞ்சை கோத்தாரி ஜனாதிபதியின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  குஜராத் மாநில பிரிவு ஐ.எப்.எஸ் அதிகாரியான பாரத் லால் ஜனாதிபதியின் இணைச் செயலாளராகவும், மூத்த பத்திரிக்கையாளர் அசோக் மாலிக் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாளர் பயிற்சி மற்றும் நலத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மேற்கண்ட அதிகாரிகள் இரண்டாண்டுகள் பதவிக்காலம் வகிப்பார்கள் என்றும் அதிகாரிகள் நியமன கமிட்டிகான கேபினட் சபை தெரிவித்துள்ளது.
  Next Story
  ×