என் மலர்

  செய்திகள்

  உதவி செய்ய வந்த மாணவியிடம் சில்மிஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு வலை
  X

  உதவி செய்ய வந்த மாணவியிடம் சில்மிஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு வலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐதராபாத்தில் தனக்கு உதவி செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம், தனிமையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், பெட்டகொட்டப்பள்ளி மண்டலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் நரசிம்ஹா.

  ஆசிரியர் தகுதிக்கான உயர்கல்வியான பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் தனது மேல்படிப்புக்கு தேவைப்படும் ஆய்வு கட்டுரைகளை எழுதி கொடுக்க சொல்வது வழக்கம். அதன்படி, அந்த மாணவியும் ஆசிரியருக்கு உதவி செய்து வந்தார்.

  இவ்வகையில், சமீபத்தில் அவர் கொடுத்த கட்டுரைகளை எழுதி முடித்த  மாணவி, அதை ஆசிரியரிடம் கொடுக்க கடந்த ஞாயிறன்று பள்ளிக்கு சென்றார்.

  விடுமுறை என்பதால் பள்ளியில் யாரும் இல்லாத சமயத்தை பயன்படுத்தி கொண்ட ஆசிரியர் நரசிம்ஹா தனக்கு உதவி செய்ய வந்த மாணவியை தனியறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

  இதைக்கண்டு பதற்றம் அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறியபடி, ஆசிரியர் பிடியில் இருந்து தப்பித்து அங்கிருந்து வீட்டுக்கு ஓடினார்.

  பள்ளியில் தன்னிடம் ஆசிரியர் நடந்து கொண்டதை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார்.

  இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சிறுமியர் பாலியல் பலாத்கார தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த பெட்டகொட்டப்பள்ளி போலீசார், தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×