search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher escaped"

    • பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • பெற்றோர் பிரச்னைகள் வேண்டாம் என புகார் அளிக்க மறுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேகாம்பாளையம்,உப்பிலிபாளையம் அருள்புரம், பகுதியை சேர்ந்த 200 மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் கணித ஆசிரியராக செந்தாமரை கண்ணன்,(வயது 57)என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன்.13 முதல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.அதனைத் தொடர்ந்து பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர்( பொறுப்பு ) ஆனந்தி மற்றும் பல்லடம் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான கூடுதல் விசாரணை மேற்கொள்ள குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    குழந்தைகள் நல அமைப்பு மாவட்ட அதிகாரிகள், பல்லடம் மகளிர் போலீசார், மாணவிகள் சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் சில்மிஷங்களில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.ஆனால், அதை எழுத்துப்பூர்வமாக புகார் வடிவில் வழங்குமாறு போலீசார் கூற, மாணவிகள் பெற்றோரின் சம்மதம் இன்றி வழங்க முடியாது என மறுத்து விட்டனர்.இதேபோல், பெற்றோரும் பிரச்னைகள் வேண்டாம் என புகார் அளிக்க மறுத்தனர். மாணவிகள்,பெற்றோர்கள் புகார் அளிக்க மறுத்ததால், ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தற்போது தப்பிஉள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் கற்பழிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பின்னர் பரோலில் வந்த ஆசிரியர் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள பாடதாரி நகரைச் சேர்ந்தவர் தாவல் திரிவேதி. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர் மீது 2 மாணவிகள் கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கற்பழிப்பு புகார் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து ராஜ்கோட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தாவல் திரிவேதி, கோர்ட்டில் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தாவல் திரிவேதி ராஜ்கோட் ஜெயிலில் இருந்து விடுதலையானார்.

    விடுதலையான சில நாட்களில் சோடிலா என்ற ஊருக்கு சென்றார். அங்கு ஜெய்தீப் தன்தால் என்பவரை சந்தித்தார். ஜெய்தீப் ஒரு கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று ராஜ்கோட் சிறையில் இருந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள்.

    ஜெய்தீப் தனது ஊரில் ஆங்கில டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். அவருடன் தாவல் திரிவேதி தனது பெயரை தர்மேந்திரா என மாற்றிக் கொண்டு டியூசன் சொல்லிக் கொடுத்தார்.

    அப்போது திடீர் என்று ஒரு மாணவியுடன் தாவல் திரிவேதி மாயமாகி விட்டார். இதுபற்றி மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் டியூசன் சென்டர் அருகில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை போட்டுப் பார்த்தபோது மாணவியுடன் ஆசிரியர் தாவல் திரிவேதி செல்லும் காட்சி பதிவானது. அவர்தான் பெயரை மாற்றிக் கொண்டு டியூசன் சென்டரில் சேர்ந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஆசிரியர் தாவல் திரிவேதி மீது போலீசார் கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். ஆசிரியர் பற்றி டியூசன் சென்டரில் விசாரித்த போது அங்கு 9 மாணவிகள் டியூசன் படித்தனர். ஒரு மாணவியை மட்டும் 1 மணி நேரம் முன் கூட்டியே வரச் சொல்வாராம். அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி இருக்கிறார். பின்னர் கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.
    ×