search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர் பகுதியில் திட்டப்பணிகளை  உரிய காலத்திற்குள்  முடிக்காவிட்டால்  அபராதம்  - மேயர், ஆணையர் எச்சரிக்கை
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் மாநகர் பகுதியில் திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் அபராதம் - மேயர், ஆணையர் எச்சரிக்கை

    • பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது.

    இதில் பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய 4 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.மாநகராட்சி கூட்டத்தில் பேசிய 4 கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர் என்றனர்.

    இதையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால் பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீட்டர் அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.

    Next Story
    ×