என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் வசந்த்
  X

  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் வசந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
  • டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

  ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றனர்.

  நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

  இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

  இதில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

  டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான புகைப்படங்களை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  Next Story
  ×