என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு (வயது 52). நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் பாபு வகுப்பறைகளை பார்வையிட்டவாறே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேல்தளத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் 5 மாணவர்கள் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியரை பார்த்ததும் ஒரு மாணவர் ஓடிவிட்டார். 4 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் கடைசி இருக்கையில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் ஹரிகரன் இருந்தார். தலைமை ஆசிரியர் பாபு 3 மாணவர்களை கண்டித்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு கடைசி இருக்கையில் இருந்த மாணவன் ஹரிகரனை நோக்கி வந்தார்.
அவனையும் கண்டித்த போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தலைமை ஆசிரியர் பாபுவை வயிறு, காது, முகத்தில் மாணவன் ஹரிகரன் சரமாரியாக குத்தினான்.
இதில் நிலைகுலைந்த அவர் கீழே சரிந்தார். தலைமை ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாணவன் ஹரிகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது பள்ளிக்கு வரவேண்டாம் என்று தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டி வந்ததால் அவரை கத்தியால் குத்தினேன் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாணவனை கைது செய்த போலீசார் அவரை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கத்தி குத்தால் தலைமை ஆசிரியரின் வயிறு, காது, முகத்தில் காயம் ஏற்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைச்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிறு, காதில் ஆபரேசன் செய்யப்பட்டது. பின்னர் அவர் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தலைமை ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பார்வையிட்டு உடல் நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி திருப்பத்தூர் பள்ளிக்கு சென்று கத்தி குத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். சம்பவ இடத்தில் இருந்த 4 மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.
கத்திகுத்து சம்பவம் வேதனையளிக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் அழைப்பாணை கடிதத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அழைப்பாணை கடிதத்துடன் புகைப்படத்துடன் கூடிய கீழ்க்காணும் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வரவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, வசிப்பிடமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இடம் குறித்த சான்றினை கட்டாயமாக எடுத்து வர வேண்டும். அழைப்பாணை கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் நாகாத்தம்மன் கோவில், தேவாலயம் உள்ளன. இங்கு தினமும் பலர் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் மற்றும் தேவாலயம் இருக்கும் இடம், அரசுக்கு சொந்தமான புஞ்சை நிலம் என்றும், அனுமதியின்றி கோவில், தேவாலயம் கட்டப்பட்டு உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் மற்றும் தேவாலயத்தை அகற்ற உத்தரவிட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இருப்பினும் கோவில் மற்றும் தேவாலயம் அகற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று காலை காரைக்குடி வட்டாட்சியர் மகேஷ்வரன், போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் என்.ஜி.ஓ. காலனி சென்றனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவை காட்டி கோவில் மற்றும் தேவாலயத்தை புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர்.
முன்னதாக கோவிலில் இருந்த அம்மன் மற்றும் சுவாமி சிலைகள், தேவாலயத்தில் இருந்த ஏசு, மாதா சிலைகள் இருக்கைகள் போன்றவை எடுத்து வெளியே வைக்கப்பட்டன.
கோவில் மற்றும் தேவாலயம் இடிப்பு காரணமாக அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. #tamilnews
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 24). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா (20).
இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஊரை கூட்டி முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம் தம்பதிக்கு ஒரு பெண் கைக் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் எழில் (21) என்பவருக்கும் நித்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
கணவன் பிரபு வேலைக்கு சென்ற பிறகு, நித்யா தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆத்திரமடைந்த பிரபு மனைவியை கண்டித்தார். ஆனாலும், எழிலுடன் அவர் நெருக்கமாகவே இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தையை கணவர் வீட்டிலேயே விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் நித்யா ஊரை விட்டு வெளியேறி விட்டார்.
வெளியூரில் தங்கியிருந்த அவர்கள் கூலி வேலை செய்து வந்துள்ளனர். பிறகு போன் மூலம் கணவர் மற்றும் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய நித்யா ஊருக்கு வந்துவிடவா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு, கணவர், குழந்தையை தூக்கியெறிந்து விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற நீ மீண்டும் ஊருக்குள் வரவே கூடாது? என்று நித்யாவை அவர்கள் கண்டிப்போடு பேசி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த நித்யாவும், அவருடைய கள்ளக்காதலனும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில், 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு கள்ளக்காதல் ஜோடி நேற்றிரவு பைக்கில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் உள்ள விஷ மங்கலம் என்ற பகுதியில் கள்ளக்காதல் ஜோடி இரவு 9 மணிக்கு வந்து பைக்கை நிறுத்தியுள்ளனர்.
ஊருக்குள் சென்றால் அசிங்கப்படுத்துவார்கள் என்று நினைத்து வேதனை பட்ட கள்ளக்காதல் ஜோடி பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி வந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர்.
வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கிடந்த 2 பேரையும் அப்பகுதி வழியாக சென்ற சிலர் பார்த்து, திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, கள்ளக்காதலன் எழில் இறந்து விட்டார். நித்யா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நித்யாவும் உயிரிழந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் கல்லல் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மனைவி பிச்சை பாண்டி (45). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயன் அரிவாளால் மனைவியை வெட்டினார். படுகாயம் அடைந்த பிச்சைபாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து விஜயன் வெளியே சென்று விட்டார்.
இந்த நிலையில்உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிச்சைபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஜயன், தனது மனைவியை கொலை செய்து விட்டோமே என வருந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது பிச்சைபாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள பிரான்மலையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நித்யா (வயது 32). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார்.
பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பாண்டியன் அழைத்தும் பலன் இல்லை. இதனால் மனைவி மீது மிகவும் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் பாண்டியன், அவரது சகோதரி பிரியா, தாயார் காந்திமதி மற்றும் உறவினர்கள் தங்கத்துரை, சுப்பிரமணியன் ஆகியோர் நித்யா வீட்டுக்குச் சென்றனர்.
பாண்டியனுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தனர். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து நித்யாவை கொடூரமாக தாக்கினர்.
படுகாயம் அடைந்த அவர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாக்குதல் குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசில் நித்யா புகார் செய்தார். நித்யாவை தாக்கியதாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஆனந்தசெல்வம் (வயது25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வாணிஜெயராம். இருவரும் நண்பர்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாணிஜெயராமின் தங்கையை ஆனந்தசெல்வம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ஆனந்தசெல்வம் வெளி நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த ஆனந்த செல்வம் இங்கேயே தங்கி விட்டார்.
மீண்டும் ஆனந்தசெல்வம் தனது காதலியை சந்தித்து பழகி வந்துள்ளார். இதனை வாணிஜெயராமன் கண்டித்தார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பனை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டபோது வாணிஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தசெல்வத்தை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தசெல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப் பதிவு செய்து வாணிஜெயராமனை கைது செய்தார்.
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர் கமலஜோதி (வயது28). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரியநரிக்கோட்டை கிராமம் ஆகும்.
சம்பவத்தன்று கமல ஜோதி தனது 2½ வயது மகன் முக்சித்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். சிவகங்கை பஸ் நிலையத்தில் காளையார்கோவில் செல்வதற்காக காத்திருந்தார்.
அப்போது சிவகங்கையை சேர்ந்த ஆண்டிச்சாமி (25), அலெக்ஸ் ஆகிய 2 பேர் குழந்தையை ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்று விட்டதாக கமலஜோதி சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு ஆண்டிச்சாமியை கைது செய்தார். அலெக்சை தேடி வருகிறார்.
குழந்தையை எதற்காக இருவரும் கடத்தினார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சிவகங்கை:
திருப்புவனம் தாலுகா கஜினிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50), விவசாயி. இவரது மகள் முத்துக் கருப்பாயி (வயது 18). இவர், பூவந்தியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துக் கருப்பாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பக் கத்து வீட்டினருடன் ஆறுமுகத்திற்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது எதிர்தரப்பினர் முத்துக்கருப்பாயி குறித்து தரக்குறைவாக பேசியதால், மன வேதனை அடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா கண்டவராயன்பட்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாலிங்கம் (வயது 50).
இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 13 வயது 8-ம் வகுப்பு மாணவியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என மிரட்டினாராம்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியரின் செயல் குறித்து தனது தாயிடம் மாணவி கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் மகாலிங்கத்தை கைது செய்தார். #Tamilnews
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக மக்கள் துன்பத்தில் உள்ளனர். இவர் கெட்டவர் என்று அவர்களுக்கும், அவர் கெட்டவர் எனக்கூறி இவர்களுக்கும் என இரு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டதால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அவர்களை காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் பஞ்சநாதன் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். #Tamilnews






