search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேசன்"

    • வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
    • மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென் றுள்ளார். அப்போது அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென் றுள்ளார். அங்கு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அப்போது டாக்டர் உடனடியாக ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்து விடுவோம் என கூறி அந்த மருத்துவ மனையிலே ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார்.

    மேலும் டாக்டர் பழைய ரிப்போர்ட்டுகளை அனுப்பு வதற்கு மொபைல் நம்ப ரையும் கொடுத்துள்ளார். இவரும் அந்த பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள் ளார். மருத்துவர் உங்களது வயிற்றில் இருக் கும் கட்டி எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென கூறி உள்ளார். அதற்கு பாத்திமாவும் தயா ராகி உள்ளார்.

    அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு பாத்திமாவும் எனக்கு அதற்கான வசதி இல்லை எனவும், அதற்கான அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் அது உங்களது இஷ்டம், இங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால் காலதா மதமாகும் என கூறியுள்ளார்.

    நான் பணிபுரியும் மருத் துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் உடனடி யாக செய்யலாம் எனவும், திரும்பவும் தெரிவித்துள் ளார். பின்னர் பாத்திமா மருத்துவரிடம் எனக்கு அதிக வலி எடுப்பதாகவும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    அப்போது அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த வாரம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அட்மிஷன் ஆகும்படி கூறி யுள்ளார். உடனடியாக மருத்துவர் கூறிய தேதியில் பாத்திமா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளி யாக சேர்ந்துள்ளார்.

    மருத்துவர் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய தேதியில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை. இது குறித்து பாத்திமா கேட்டவுடன் இது அரசு ஆஸ்பத்திரி உடனே செய்ய முடியாது. நாளை செய்யலாம், அடுத்த நாள் செய்யலாம், அதற்கு அடுத்த நாள் பண்ணலாம் என காலம் தாழ்த்திக்கொண்டே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு வலி அதிகமாகி உள்ளது.

    இதனால் துடிதுடித்து போன பாத்திமா அழுது புலம்பி உள்ளார். இதை பார்த்த மருத்துவர் நீங்கள் வீட்டுக்குச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஏன் என கேட்டதற்கு இங்கு நிறைய நோயாளிகள் இருக் கிறார்கள் நீங்கள் சென்று விடுங்கள் கூறியுள்ளார். இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் அவர் வலியோடு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது வீடியோ பதிவை பார்ப்பவர்களுக்கு மனதில் வேதனையை ஏற்ப டுத்துகிறது. ஏழைகள் பயன்பட வைத்திருக்கும் அரசு மருத்துவமனை இவ் வாறான மருத்துவர்களின் பிடியில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இவ்வா றான அநியாயங்களை தட்டி கேட்டால், மருத்துவர்கள் தட்டிக்கேட்பவர் மீது, மருத்துவர்களை தாக்கி விட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து அவர்களை சிறை யில் தள்ளி விடுகின்றனர்.

    இதனால் யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை, தமிழக மருத்துவத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுப் பதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப டுத்தி வருகிறது. இவ்வாறான மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

    • குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
    • சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடந்த மொத்த பிரசவங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்தது.

    இது ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேசன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் 50.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 39.3 சதவீதமாகவும் உள்ளனர்.

    குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    ஒரு சில மருத்துவமனைகள், தாய்க்கு இயல்பான பிரசவம் செய்யும் திறன் இருந்தபோதிலும், ஆபரேசனை தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றன. இதனால் சாதாரண பிரசவத்துடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.

    மேலும் சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தாங்களாகவே ஆபரேசனை கோருகின்றனர். இது சாதாரண பிறப்பை விட பாதுகாப்பான விருப்பம் என்று நம்புகிறார்கள்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    சமீப நாட்களில், மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான கர்ப்பம் மற்றும் செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவது இயல்பானதாக மாறி வருகிறது.

    இது பிரசவிக்கும் போது சிக்கலின் விகிதத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்ற, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆபரேசன் தேர்வு செய்யப்படுகிறது.

    15 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பங்கள் சிக்கல்களில் இறங்குகின்றன, அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. இங்கே தாய் மற்றும் குழந்தைக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக மாறுகிறது.

    மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளார்ந்த அபாயத்தைக் கொண்டுள்ளன.

    புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்ப்பாலூட்டுவதில் இருந்து தூரமாக்கும் என்ற கவலையும் உள்ளது.

    அறுவை சிகிச்சையின் காரணமாக, மென்மையான கீறல்கள் மற்றும் தையல்களால், தாய்மார்கள் உட்கார்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இருப்பினும் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பது, சிக்கல்களைத் தடுப்பது மற்றும் சாதாரண பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின் போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும் செய்ய பரிந்துரைக்கிறோம் என்றனர்.

    ×