என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே கணவருடன் வாழ மறுத்த பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
    X

    சிவகங்கை அருகே கணவருடன் வாழ மறுத்த பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

    கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள பிரான்மலையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நித்யா (வயது 32). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார்.

    பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பாண்டியன் அழைத்தும் பலன் இல்லை. இதனால் மனைவி மீது மிகவும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் பாண்டியன், அவரது சகோதரி பிரியா, தாயார் காந்திமதி மற்றும் உறவினர்கள் தங்கத்துரை, சுப்பிரமணியன் ஆகியோர் நித்யா வீட்டுக்குச் சென்றனர்.

    பாண்டியனுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தனர். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து நித்யாவை கொடூரமாக தாக்கினர்.

    படுகாயம் அடைந்த அவர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தாக்குதல் குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசில் நித்யா புகார் செய்தார். நித்யாவை தாக்கியதாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews

    Next Story
    ×