search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் கைது"

    • காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர்.
    • மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.

    இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனு க்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்தி லேயே முருகன் துடிதுடித்து இறந்துபோனார்.


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார்.
    • தலையில் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

    நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.

    இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம். அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.

    ஆனாலும் நர்சு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நர்சை கம்மத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நர்சின் அண்ணனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் சக்திவேல் (வயது 35). கார்த்திக் (வயது 28).

    கார்த்திக் மனைவி புனிதா (வயது 24). இவர்களுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயாரிடம் தகராறில் ஈடுப்பட்ட புனிதாவை கார்த்திக்கின் அண்ணன் சக்திவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இந்த தகராறு சகோதர்களான சக்திவேல், கார்த்திக் இடையே சண்டையாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை உறவினர்கள் அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடல் திருவாரூரில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னசாமி மனைவி சிந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் நகை, பணம் காணவில்லை
    • சொந்த தம்பி வீட்டிலேயே அண்ணன் நகை,பணம் திருடிய சம்பவம் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரேகடஅள்ளி அண்ணநகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது32). இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சின்னசாமி அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெட்டிக்கடை வதை்து நடத்தி வருகிறார். சின்னசாமியின் அண்ணன் சதாசிவம் (37). டைலரான இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சதாசிவம் கடந்த 16-ந் தேதி சொந்த ஊருக்கு வந்திருப்பதாகவும், தனக்கு பணம் வேண்டும் என்றும் சின்னசாமியிடம் போனில் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம்ஏதும் இல்லை கூறியதாக ெதரிகிறது.

    இதைத்தொடர்ந்து சின்னசாமி மனைவி சிந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின், ¼ பவுன் மோதிரம், 4 ஜோடி வெள்ளிகொலுசு மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. உடனே சிந்து தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து சின்னசாமி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது அண்ணன் என்னிடம் பணம் கேட்டபோது, இல்லையென்று கூறியதால், வீட்டில் இருந்த 1¼ பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர். சொந்த தம்பி வீட்டிலேயே அண்ணன் நகை,பணம் திருடிய சம்பவம் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் , பிரபு , இளையராஜா.
    • இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் (வயது 41), பிரபு (38), இளையராஜா (35). இவர்கள் சகோதரர்கள். விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கமலக்கண்ணனுக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து பாகப் பிரிவினை பத்திரம் எழுதி கேட்டுள்ளார். இதில் கமலக்கண்ணனுக்கும் இளையராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அருகிலிருந்த இரும்பு கம்பியால் இளையராஜாவை தாக்கினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த இளையராஜா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கமலக்கண்ணனுடன் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    சொத்தை பிரித்து கேட்ட தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன இளையராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து கேட்டு அவரது தந்தை ஏழுமலையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்து போனார்.
    • போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (வயது 35), வீரமுத்து (32). பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்த இருவருமே திருமணமானவர்கள். இதில் வீரமுத்து லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வீரமுத்து சரிந்தார். அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த வீரமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வீரமுத்து அவரது அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து வீரமுத்துவை வீட்டுக்கு வரும்போது வழி மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வீரமுத்து இறந்து போனது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் தனியாக இந்த செயலில் ஈடுபட்டாரா?, அல்லது வேறு யாருடனும் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    • அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஸ் (வயது29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (21) ஆகியோருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் சேர்ந்து அதீசை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தம்பி கொலையில் அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
    • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

    இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

    • சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர்.
    • அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நெம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன்-மாரியாயி தம்பதியினர். இவர்களுக்கு முத்தையா (வயது 30), கோபி (27) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கோபி மட்டும் கூலி வேலைக்கும் செல்வார். இதில் முத்தையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இவர் சில நேரங்களில் தனது தாய் மட்டும் அல்லாது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளையும் அடித்து வந்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முத்தையா அவரது தாய் மரியாயை அடித்துள்ளார். இதனால் அண்ணன் தன்னையும் அடிக்க கூடும் என கருதிய கோபி வீட்டில் படுக்கையறையில் தூங்காமல் மொட்டை மாடியில் சென்று படுத்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக ஆடு மேய்க்க சென்றுவிட்டு, சந்தையில் ஆடுகளை விற்று விட்டு வந்தனர். இந்தநிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஆடு விற்பதில் நேற்று திடீரென்று சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இரவு வழக்கம் போல் வீடு திரும்பிய அவர்கள் சாப்பிட்டு விட்டு, வீட்டின் மாடியில் தூங்க சென்றனர். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. பின்னர் அவர்கள் தூங்க சென்றனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்தையா தம்பி என்றும் பாராமல், தூக்கத்தில் இருந்த கோபியை இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோபி மண்டை உடைந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தம்பியை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாவையும் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் நான் கொலை செய்யவில்லை என கூறினார். அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே நரசிம்ம ராஜு உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
    • வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபவரம், கொல்லலடியப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்ம ராஜு (வயது 70). இவரது தம்பி ராமகிருஷ்ண ராஜு (68). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இறந்து விட்டதால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    விவசாய கூலி வேலை செய்து வந்த நரசிம்மராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    மேலும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நரசிம்மராஜு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தனது தம்பியிடம் அழுது புலம்பினார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமகிருஷ்ண ராஜு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டை விட்டு போக வேண்டியது தானே. வீட்டில் இருந்து கொண்டு ஏன் தொல்லை கொடுக்கிறாய் என கூறினார்.

    இதனால் தம்பி மீது கோபத்தில் இருந்த நரசிம்மராஜு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த தம்பியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராமகிருஷ்ணராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

    நேற்று பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணராஜுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மராஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
    • இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சஞ்சீவி காந்தி (43), நாகராஜ் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் சஞ்சீவி காந்திக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி (7) என்ற மகளும் உள்ளனர், இவர் கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சின்னகுளம் என்ற பகுதியில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

    இளையமகன் நாகராஜ் என்பவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். நாகராஜ் பங்களாப்புதூர் அண்ணா நகரில் தந்தை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவி காந்தி மற்றும் நாகராஜ் இருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சஞ்சீவி காந்தி பங்களாப்புதூர் அண்ணா நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார்.

    இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இவர்களை அவர்களது பெற்றோர் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் நாக ராஜை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்த நாகராஜ்க்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பங்களா ப்புதூர் போலீசார் சஞ்சீவி காந்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதை தொடர்ந்து சஞ்சீவி காந்தியை போலீ சார் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் படுத்து கிறார்கள்.

    ×