தம்பி வீட்டில் நகை-பணம் திருடிய அண்ணன் கைது

சின்னசாமி மனைவி சிந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் நகை, பணம் காணவில்லைசொந்த தம்பி வீட்டிலேயே அண்ணன் நகை,பணம் திருடிய சம்பவம் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தம்பி வீட்டில் நகை-பணம் திருடிய அண்ணன் கைது
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரேகடஅள்ளி அண்ணநகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது32). இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சின்னசாமி அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெட்டிக்கடை வதை்து நடத்தி வருகிறார். சின்னசாமியின் அண்ணன் சதாசிவம் (37). டைலரான இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சதாசிவம் கடந்த 16-ந் தேதி சொந்த ஊருக்கு வந்திருப்பதாகவும், தனக்கு பணம் வேண்டும் என்றும் சின்னசாமியிடம் போனில் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம்ஏதும் இல்லை கூறியதாக ெதரிகிறது.

இதைத்தொடர்ந்து சின்னசாமி மனைவி சிந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின், ¼ பவுன் மோதிரம், 4 ஜோடி வெள்ளிகொலுசு மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. உடனே சிந்து தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சின்னசாமி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது அண்ணன் என்னிடம் பணம் கேட்டபோது, இல்லையென்று கூறியதால், வீட்டில் இருந்த 1¼ பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர். சொந்த தம்பி வீட்டிலேயே அண்ணன் நகை,பணம் திருடிய சம்பவம் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com