என் மலர்

  செய்திகள்

  இளையான்குடி அருகே தங்கையை காதலித்த வாலிபர் குத்திக்கொலை அண்ணன் வெறிச்செயல்
  X

  இளையான்குடி அருகே தங்கையை காதலித்த வாலிபர் குத்திக்கொலை அண்ணன் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளையான்குடி அருகே தங்கையை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் வாலிபரை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  சிவகங்கை:

  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஆனந்தசெல்வம் (வயது25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வாணிஜெயராம். இருவரும் நண்பர்கள்.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாணிஜெயராமின் தங்கையை ஆனந்தசெல்வம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

  அதனை தொடர்ந்து ஆனந்தசெல்வம் வெளி நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த ஆனந்த செல்வம் இங்கேயே தங்கி விட்டார்.

  மீண்டும் ஆனந்தசெல்வம் தனது காதலியை சந்தித்து பழகி வந்துள்ளார். இதனை வாணிஜெயராமன் கண்டித்தார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.

  இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பனை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டபோது வாணிஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தசெல்வத்தை சரமாரியாக குத்தினார்.

  இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தசெல்வம் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அவரது தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப் பதிவு செய்து வாணிஜெயராமனை கைது செய்தார்.

  Next Story
  ×