search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illicit Relationship"

    நிலக்கோட்டையில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பானு (வயது 30). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்தவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பானுவின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் பானுவுக்கும் சர்புதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை கண்டித்தனர்.

    இதனால் பானு தனது கள்ளக்காதலனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, 3 மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கியதால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (வயது 45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38), ஏற்கனவே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அவர் பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார். பின்னர் பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ரவியின் மனைவி மாரி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை காதலுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொல்ல முயனற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணகுமார் வயநாட்டில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கிருஷ்ணகுமார் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சுஜாதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 35) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து கணவருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருப்பதால் கணவரை கொன்று விடலாம் என்று கள்ளக்காதலனிடம் கூறினார். இதனையடுத்து ரூ.4 லட்சம் கொடுத்து 4 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். கணவரின் நடவடிக்கைகளை சுஜாதா அவ்வப்போது கள்ளக்காதலுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவர் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்தார்.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு கிருஷ்ணகுமார் வெளியூர் புறப்பட்டார். அவர் சென்ற பின்னர் அவர் என்ன ஆடை அணிந்துள்ளார். எந்த வழியே செல்கிறார் என்பது உள்பட அனைத்து விபரங்களையும் சுஜாதா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார். கள்ளக்காதலன் இது குறித்து கூலிப்படைக்கு தகவல் கூறினார்.

    கிருஷ்ணகுமார் வடக்காஞ்சேரி ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் ரோட்டை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அதே கார் திரும்பி வேகமாக வந்தது. அப்போது சுதாரிப்பதற்குள் கிருஷ்ணகுமார் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு வலது கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விய்யூர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீஜித், ஆன்ந்த் ஆகியோர் காயம் அடைந்த கிருஷ்ணகுமாரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் மோதிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மோதிய கார் எண்ணை வைத்து சைபர்செல் போலீசார் உதவியுடன் கூலிப்படையை சேர்ந்த ஓமனகுட்டன், சஜித், நசுரூதீன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கூறிய தகவல்படி மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. கார் மோதிய வேகத்தில் கிருஷ்ணகுமார் இறந்திருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதாக கூலிப்படையினர் கூறினர்.

    இதனயைடுத்து போலீசார் சுஜாதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுரேஷ்பாபு ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் இன்று சிட்டி கமி‌ஷனர் ராஜூ விசாரணை நடத்துகிறார். #tamilnews
    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வியாபாரியை கொலை செய்ததது குறித்து மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). வியாபாரியான இவர் ஆவின் பாலகமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கம்பைநல்லூர் அருகே பெரிசாகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து கம்பைநல்லூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது மனைவியே ஆட்களை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜெயந்தி (35), அவரது கள்ளக்காதலன் அண்ணாமலை (25), மணிகண்டன் (26) என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தபோது அருள்பாண்டியன் சீட்டு எடுத்து கொடுக்க வேண்டிய பணம் ஒன்றரை லட்சத்தை கொடுப்பதாக கூறி அண்ணாமலையை காரில் அழைத்து சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு பின்னர் அவரது உடலை மணிகண்டன் உதவியுடன் காரில் ஏற்றிச்சென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளி அவர் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட முயற்சி செய்தனர்.

    மேலும் ஜெயந்திக்கும், அருள்பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அண்ணாமலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் துணையுடன் இந்த கொலையை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதான அருள்பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அவர் கடந்த 20 நாட்களாக அண்ணாமலையை கொல்ல சமயம் பார்த்து காத்திருந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனியாக சென்றபோது அவரிடம் போனில் பேசி அவரை பணம் வாங்க நேரில் வர அழைத்து கடத்தி சென்று கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட அண்ணாமலை குண்டான உடல் அமைப்பு கொண்டவர். அவருடைய உடல் எடை 110 கிலோ ஆகும். அவரை இவர்கள் 3 பேர் மட்டுமே கொன்றிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். அவர்கள் யார், யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×