search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer murder"

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வியாபாரியை கொலை செய்ததது குறித்து மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). வியாபாரியான இவர் ஆவின் பாலகமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கம்பைநல்லூர் அருகே பெரிசாகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து கம்பைநல்லூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது மனைவியே ஆட்களை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜெயந்தி (35), அவரது கள்ளக்காதலன் அண்ணாமலை (25), மணிகண்டன் (26) என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தபோது அருள்பாண்டியன் சீட்டு எடுத்து கொடுக்க வேண்டிய பணம் ஒன்றரை லட்சத்தை கொடுப்பதாக கூறி அண்ணாமலையை காரில் அழைத்து சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு பின்னர் அவரது உடலை மணிகண்டன் உதவியுடன் காரில் ஏற்றிச்சென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளி அவர் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட முயற்சி செய்தனர்.

    மேலும் ஜெயந்திக்கும், அருள்பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அண்ணாமலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் துணையுடன் இந்த கொலையை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதான அருள்பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அவர் கடந்த 20 நாட்களாக அண்ணாமலையை கொல்ல சமயம் பார்த்து காத்திருந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனியாக சென்றபோது அவரிடம் போனில் பேசி அவரை பணம் வாங்க நேரில் வர அழைத்து கடத்தி சென்று கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட அண்ணாமலை குண்டான உடல் அமைப்பு கொண்டவர். அவருடைய உடல் எடை 110 கிலோ ஆகும். அவரை இவர்கள் 3 பேர் மட்டுமே கொன்றிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். அவர்கள் யார், யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    கம்பத்தில் வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் கம்பம் 2-வது பெரிய நகரமாக உள்ளது. கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கம்பம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி பாராக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இன்று காலை அந்த காலி இடத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர்.

    இந்த வி‌ஷயம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் கழுத்தை பீர் பாட்டிலால் அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் கவரால் மூடி தீ வைக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் சரியாக தீ எரியாததால் முகம் தெளிவாக உள்ளது. கம்பம் பகுதிக்கு அதிக அளவு வியாபாரிகள் வந்து செல்வதால் கொலை செய்யப்பட்ட நபர் வியாபாரியாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கம்பம் பஸ்நிலையம் அருகே அதிக அளவு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி வரும் குடிமகன்கள் அதே பகுதியில் உள்ள கடைகளில் மது அருந்துகின்றனர். மேலும் சிலர் சாலையிலேயே மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர்.

    குடிபோதையில் தங்களுக்குள் சண்டையிட்டு அந்த நபர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு பகுதிகளில் திட்டமிட்டு கொலை செய்து இங்கு கொண்டு வந்து பிணத்தை வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரின் பல பகுதிகளில் குற்றச் செயல்களை கண்காணிக்க கேமராக்கள் உள்ளன. ஆனால் போலீசாரின் அலட்சியப் போக்கே குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புறக்காவல் நிலையத்தில் போலீசார் இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வர பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    பிக்பாக்கெட் திருடர்கள் சமூக விரோதிகள் அதிக அளவில் உலாவி வருவதால் இரவு நேரத்தில் பஸ் நிலையத்துக்குள் வராமலேயே பயணிகள் மெயின் ரோட்டில் இறங்கிச் செல்கின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தி சமூக விரோத செயல்களை கட்டுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×