என் மலர்
செய்திகள்

திருப்புவனம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
திருப்புவனம் அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
திருப்புவனம் தாலுகா கஜினிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50), விவசாயி. இவரது மகள் முத்துக் கருப்பாயி (வயது 18). இவர், பூவந்தியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துக் கருப்பாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பக் கத்து வீட்டினருடன் ஆறுமுகத்திற்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது எதிர்தரப்பினர் முத்துக்கருப்பாயி குறித்து தரக்குறைவாக பேசியதால், மன வேதனை அடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






