என் மலர்
புதுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்ததி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.ஐ. ஒன்றிய செயலர் அரசப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் துவக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பாசன ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் .கந்தர்வக் கோட்டை நகரில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை எரியவிட வேண்டும்,பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் செங்கோடன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பிகாபதி, நாகராஜன், அம்பலராஜ், பெருமாள், தங்கையன், கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் பொன்னமராவதி வட்டாரத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொன்னமராவதி வட்டார அட்மா திட்ட தலைவர் காசிகண்ணப்பன் தலைமை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர் எட்வர்ட் சிங் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அதை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது பற்றியும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
அட்மா திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேவி எடுத்துக் கூறினார். வட்டார வேளாண்மை அலுவலர் கவிதா மற்றும் துணை வேளாண்மை அலுவலர் முருகன் ஆகியோர் மானாவரி மேம்பாட்டு திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.
அதனை தொடர்ந்து அட்மா ஆலோசனைகுழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ப்ரியங்கா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜீ செய்திருந்தார்.
கீரனூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.சென்றவாரம் காய்ச்சல் ஏற்பட்டு 2-ம் வகுப்பு மாணவி உயிர் இழந்தார். இதனால் பொது மக்களிடையே பீதியும்,பயமும் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட 20 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை முழுமையாக கட்டுபடுத்த பேரூராட்சி பணியாளர்களும்,சுகாதார துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மக்கள் பயன்படுத்தும் காவிரி நீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி பணியாளர்களுடன் செயல்அலுவலர் கணேசனும் இணைந்து வீதிவீதியாக சென்று குப்பைகள், சாக்கடைகள் நீண்ட நாள்களாக அகற்றபடாமல் கிடக்கும் சுகாதாரமற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
காலை8 மணி முதல் மாலை 6 மணிவரை இடை விடாமல் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களுடன் சேர்ந்து செயல் அலுவலர் கணேசன் கொசு மருந்து அடித்தார். இதனால் பணியாளர்கள் உற்சாகமாக வேலை பார்த்தனர்.
கந்தர்வக்கோட்டையில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின்சார விநியோகத்தைக் கண்டித்தும், நாம்தமிழர் கட்சியின் சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல இணை செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். கணேசன் ,அருண் மொழிச் சோழன், பருத்திவீரன்,சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கொள்கைபரப்பு செயலாளர் கு.ஜெயசீலன் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் குறைந்தழுத்த மின்விநியோகம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆர்பாட்டம் செய்தனர். இதில் சசி,ரவிச் சந்திரன்,மலர் வண்ணன்,வளையாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வருமானவரித்துறை சோதனை நடந்தது.
புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல்குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களும், இதன் பின்னர் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டிற்கு மே 17-ந் தேதி சென்ற அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.
விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, அண்ணன் உதயகுமார் ஆகியோர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினர் கூறும்போது, வருமான வரித்துறை அலுவலர்களின் விசாரணையில் உள்ள அமைச்சர்விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என்று ஜூலை 28-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் வந்தது என்று தெரிவித்தனர்.
மாவட்ட பதிவாளர் சசிகலா, வருவாய்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல்குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 11-ந்தேதி திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை மத்திய பொதுப்பணித்துறை அலுவலர்கள் மதிப்பீடு செய்தனர். அதன்பிறகு வருமான வரித்துறை துணை இயக்குனர் கார்த்திக் மாணிக்கம் தலைமையில் வருமான வரித்துறை அலுவலர்கள் 10 பேர், இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டிற்கு மே 17-ந் தேதி சென்றனர்.
அங்கு ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.
இந்த சோதனையை அடுத்து விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, அண்ணன் உதயகுமார் இருவரும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சம்மன் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினர் கூறும்போது, வருமான வரித்துறை அலுவலர்களின் விசாரணையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என்று ஜூலை 28-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் வந்தது.
அந்த நோட்டீஸ் குறித்து மாவட்ட பதிவாளர் சசிகலா, வருவாய்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்தும் தொலைபேசி மூலம் தகவல் பரிமாறி கொள்ளப்பட்டது என்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து சொத்துக்களை முடக்குவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
அமைச்சர் தரப்பினரின் சொத்துக்களை யாரிடமும் மாற்றம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதா? அல்லது குவாரிகளை இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக்கூடாதா? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் உள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், அதை திசை திருப்புவதற்காக மத்திய அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான நோட்டீஸ் ஒன்று புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவுக்கு கடந்த 28-ந் தேதியே அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம், குவாரி ஆகியவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான நடவடிக்கைகளில் மாவட்ட பதிவாளர் சசிகலா அரசின் வழிகாட்டுதல் படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் மாவட்ட பதிவாளர் சசிகலாவை விருதுநகருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் காரைக்குடியைச்சேர்ந்த ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவத் துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல் முகாம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாதத் தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் தூய நீரில் உருவாகும். இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் பொழுது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இக்கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
ஏடிஸ் கொசுக்கள் தேங்கி நிற்கும் நல்லத் தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகிறது. டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் டப்பா, பூந்தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தேங்கி கிடக்கும் நல்ல நீரில் உற்பத்தி ஆகிறது. எனவே பொதுமக்கள் ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அழித்து வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தற்காப்பு மருந்துகள் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் நிலவேம்பு குடிநீர் அருந்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். பெரியவர்கள் 30 மி.லிட்டரும், சிறியவர்கள் 15 மி.லிட்டரும் தினமும் காலை 3 முதல் 5 நாட்கள் வரை பருகிவர நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைதத்து. இதனால் பெரியவர்கள், சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
ஆடி மாதம் என்பதால் நல்ல மழை பெய்ய வேண்டும் என எல்லா கோவில்களிலும் விசேஷ பூஜைகள், குதிரை எடுப்பு, கிடாவெட்டு என என பூஜைகள் செய்தனர்.
கீரனூரை அடுத்த குளத்தூரில் செல்லாயி அம்மன், அய்யனார் கோவில், நாஞ்சூர் கருப்பர், அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜையும் நடந்தது.
கீரனூர் காந்தி நகர் பொதுமக்கள் சார்பாக வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, பிரார்த் தனைகள் நடந்தது.
கடந்த சனிக்கிழமை ஆன்மீக பெரியவர்கள் பலத்த மழை பெய்யும் என கூறி வந்த நிலையில் இரவு 8 மணிக்கு லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை கனமழையாக பெய்ய தொடங்கியது.
சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பழைய கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலி தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 6). கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். உடனே அவளை சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதேபோல் கீரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார பணியாளர்களும், பேரூராட்சி பணியாளர்களும் முகாமிட்டு கொசுமருந்து அடித்தும், சாக்கடைகளை சுத்தம் செய்தும் வருகின்றனர்.
புதுக்கோட்டை காமராஜபுரம் 17ம் வீதியில் கடந்த 15.3.2015ம் தேதி பழனி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் செந்தில் குமார் ஆகியோருக்கும் இடையே செல்போன் திருட்டு தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது பழனிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாராயணன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார், செல்வம் ஆகியோர் கத்தியால் நாராயணனை குத்திக் கொலை செய்தனர்.
இந்த கொலை குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணை புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி சாய்பிரியா நாராயணனை கொலை செய்த குற்றத்திற்காக செல்வம் மற்றும் செந்தில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நெடுஞ் சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ் சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஒய்.எஸ்.அன்புச்செல்வன் தலைமை வகித்தர். நிர்வாகிகள் கேசவன், ரவிச்சந்திரன், ஜேம்ஸ்லூக், பழனிவேலு, அம்பிகாபதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க.செந்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செயலாளர் ஆர்.ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் சி.வசந்தா, துரை.அரங்கசாமி, குமரேசன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக க.கருப்பையா வரவேற்க, எம்.பெரமையன் நன்றி கூறினார்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ,நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தை உடனுடனுக்குடன் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். அலுவலக உதவியாளர், காவலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் பணியிலிருந்து இளைநிலை உதவியாளர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.






