என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நெடுஞ் சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ் சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஒய்.எஸ்.அன்புச்செல்வன் தலைமை வகித்தர். நிர்வாகிகள் கேசவன், ரவிச்சந்திரன், ஜேம்ஸ்லூக், பழனிவேலு, அம்பிகாபதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க.செந்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செயலாளர் ஆர்.ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் சி.வசந்தா, துரை.அரங்கசாமி, குமரேசன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக க.கருப்பையா வரவேற்க, எம்.பெரமையன் நன்றி கூறினார்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ,நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தை உடனுடனுக்குடன் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். அலுவலக உதவியாளர், காவலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் பணியிலிருந்து இளைநிலை உதவியாளர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.






