search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gandarvakottai"

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கல்லாக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த  வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் கந்தர்வக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் முகஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கந்தர்வக்கோட்டையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்அய்யா தலைமையில் நடைபெற்றது. 

    போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா, சுந்தை ராமசாமி, ரங்கராஜன், அண்டனூர் முருகையா, மாரிமுத்து,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
    கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் ஊழியர் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). அரசு போக்குவரத்து கழகக்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சுமதி(40), மகன் கதிர்வேல் (21) மட்டும் இருந்தனர். இரவு இருவரும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு தூங்கினர்.

    இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக சென்று ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கினர். பின்னர் பீரோவைத்திறந்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து தூங்கி கொண்டிருந்த சுமதி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து விழித்தெழுந்த சுமதி சத்தம் போடவே, கதிர்வேல் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 12 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னர் மன்னன், சப்- இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டது.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×