என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    கீரனூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

    கீரனூரில் நேற்று இரவு 8 மணிக்கு லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை கனமழையாக பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைதத்து. இதனால் பெரியவர்கள், சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    ஆடி மாதம் என்பதால் நல்ல மழை பெய்ய வேண்டும் என எல்லா கோவில்களிலும் விசேஷ பூஜைகள், குதிரை எடுப்பு, கிடாவெட்டு என என பூஜைகள் செய்தனர்.

    கீரனூரை அடுத்த குளத்தூரில் செல்லாயி அம்மன், அய்யனார் கோவில், நாஞ்சூர் கருப்பர், அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜையும் நடந்தது.
    கீரனூர் காந்தி நகர் பொதுமக்கள் சார்பாக வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, பிரார்த் தனைகள் நடந்தது. 

    கடந்த சனிக்கிழமை ஆன்மீக பெரியவர்கள் பலத்த மழை பெய்யும் என கூறி வந்த நிலையில் இரவு 8 மணிக்கு லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை கனமழையாக பெய்ய தொடங்கியது.

    சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
    Next Story
    ×