என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவன் பேட்டை என்ற இடத்தில் வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாணவன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கன்னிராஜ் மகன் முருகராஜ் (வயது 25) என்பதும் இவர் திருமலை ராஜன் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

    நாகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய தலைவர்கள் நிர்மல்பாண்டியன், முருகேசபாண்டியன், இளைஞரணி செயலாளர் மார்ட்டின் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை அவதூறாக பேசியதாக மு.க. ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அப்போது மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கீழ்வேளூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த சிக்கல் ஊராட்சி பனைமேடுபகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் ரோஸ்லின் ஆல்பர்ட் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு ரோஸ்லின் ஆல்பர்ட் மோட்டார் சைக்கிளில் சிக்கலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரோஸ்லின் ஆல்பர்ட்டை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகைஅரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் தொடர்ந்து கடல்பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வாலிபர், கள்ளிமேடு செல்லும் பஸ்சில் சென்றார். அவர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுபற்றி வேதாரண்யம் கியூ பிராஞ்சு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

    அப்போது அந்த வாலிபர் இலங்கை காங்கேசன் துறைமுகம் அருகே வெல் வெட்டு துறையை சேர்ந்த அருளானந்தசாமி மகன் பார்த்தசாரதி (வயது40) என்று தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் பாஸ்போர்ட், மற்றும் விசா இல்லாததால் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா வாங்குவதற்காக மேலும் 2 பேருடன் கடல் வழியாக வேதாரண்யம் மணியன்தீவுக்கு வந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகள் 2 பேரும் சென்று விட்டனர். இதனால் பஸ்சில் வந்த பார்த்தசாரதி மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது.

    தொடர்ந்து பிடிபட்ட இலங்கை வாலிபர் பார்த்தசாரதியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாகையில் ரவுடி பட்டியலில் உள்ள 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் பெயர் உள்ள நாகை மருந்து கொத்தன பகுதி கேசவன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (வயது 25), நாகை வடக்கு தெரு தனபால் சிங்காரவேல் (25), பாலு (47) மயிலாடுதுறை அண்ணா நகர் வடக்கு தெரு விஜயேந்திரன் மகன் அஜித் குமார் (22) சேந்தங்குடி தென்பாதியை தெரு அழகேசன் மகன் அருண் பாண்டியன் (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ரவி மகன் ராகுல் (வயது17), தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் மகன் காளிதாஸ் (17), வண்டல் பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் ராஜ் (17). இவர்கள் 3 பேரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று திருவாரூரிலிருந்து வேதாரண்யத்துக்கு சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். வேதாரண்யம் வள்ளியம்மை சாலை அருகே பக்க வாட்டில் நின்ற டிராக்டரை பஸ் முந்தி செல்ல முயன்றபோது படியில் நின்ற ராகுல், காளிதாஸ், ராஜ் ஆகிய 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். காளிதாஸ் மற்றும் ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பலியான ராகுல் உடலை வேதாரண்யம் போலீசார் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை அருகே காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் வடக்கு பால்பண்ணைசேரியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பு அமர்ந்து 2 பேர் மது குடித்து உள்ளனர். இதை பார்த்து ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ராஜேந்திரனை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதுபற்றி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த மணிபாரதி (21), பிரவீன் (20) என்று தெரியவந்தது.

    வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடாகாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டு சராசரி உற்பத்தியான 6 லட்சம் டன்னிலிருந்து 8 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுவதால் உப்பு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் டன் ரூ 600-க்கு விற்ற உப்பு தற்போது டன் ரூ.500-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி அதிகமாகி மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர்கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்துள்ள கல்பாக்கம் பகுதியில் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார்.

    இந்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அதன் கீழ் ஒரு சிலவாசகமும் குறிப்பிட்டு இருந்தார்.

    பின்னர் நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு பொரவச்சேரிக்கு வந்தார்.

    இந்நிலையில் மாட்டு இறைச்சி சூப்பை முகம்மது பைசான் சாப்பிடும் புகைப்படத்தை அப்பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தினேஷ் குமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட கும்பல் நேற்று இரவு முகம்மது பைசான் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த முகம்மது பைசானை கத்தி, மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். ஆவேசத்துடன் கும்பல் கத்தியால் குத்தியதில் முகம்மது பைசான் காயம் அடைந்தார். இதனால் பயந்து போன கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த முகம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முகம்மது பைசான் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கீழ்வேளூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே முகம்மது பைசானை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(24), கணேஷ் குமார்(25), மோகன் குமார்(27), அகஸ்தியன்(29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கைதான 4 பேரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    மேலும் தலைமறைவாக இருந்து வரும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே தேரழந்தூர் மகிமலை ஆற்றங்கரையில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் பிடிப்பட்டார். மற்றொருவர் தப்பி ஓடினார். உடனே போலீசார், பிடிப்பட்டவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பிடிப்பட்டவர் தேரழந்தூர் தென்பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (வயது 25) என்பதும், தப்பியோடியவர் குத்தாலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த காத்தமுத்து மகன் அண்ணாதுரை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக தப்பியோடிய அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

    இதேபோல் குத்தாலம் அருகே திருவாவடுதுறை மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்ற மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே கோடங்குடி கோணயாம் பட்டினம் கடலாழி ஆற்றங்கரையில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் இளையராஜா (31) என்பவரை பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 
    சீர்காழி அருகே திருட்டுத்தனமாக நடைபெறும் மது விற்பனையை கண்டித்து பெண்கள் நடத்திய ஆவேச போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் கங்கா (வயது45) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து திருட்டுதனமாக பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக பல முறை சிறை சென்ற நிலையில் மீனவ கிராம மக்களின் எச்சரிக்கை யையும் மீறி தொடர்ந்து மதுவிற்பனையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 10நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ பெண்கள் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதை பார்த்து ஆத்திரமடைந்தனர்.

    உடனே கங்காவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில மதுபாட்டில் பெட்டிகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொரு பாட்டிலாக கீழே போட்டு உடைத்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி வந்தனா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் கங்காவை சீர்காழி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக கங்கா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு (வயது55) ராஜகோபால் 56). இவர்கள் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள்.

    உறவினர்களான இவர்கள் ரெண்டு பேரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இது தொடர்பாக நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி ராஜகோபால், வடிவேல் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொண்டனர். 

    இதில் படுகாயமடைந்த வடிவேல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து புகார் புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். வடிவேலை கொலை செய்ய முயன்ற ராஜகோபாலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    ×